உடையட்டும் உன் விலங்குகள் :- 1.
அன்று ,
அன்றைய விலங்குகள்
முதலில் பெற்றோர்
பிறகு கணவன்
முடிவில் மகன்
அதனால்தான்
வேலிக்குள்ளே
பயிர் காக்கப்பட்டது.
ஆனால் இன்று
இன்று பயிர்களே தனக்கு
வேலியாக மாறிய புதுமை.
பாரதி கண்ட புதுயுகம்
கனவில் மலர்கிறதாம்.
அன்று
பெண்கள் அடுப்பூதும்
பொம்மைகள்.
இன்று
உயர்குதிச் செருப்புகள் கொண்டு நடக்கும்
உயர்குடிப் பெண்கள்.
அன்று
வீட்டுக்கல்வி போதுமென விடப்பட்டனர்.
இன்று
வேண்டாத கல்வியெல்லாம் கற்றுத் திரிகின்றார்.
அன்று
அன்னமென நடைபயின்றவர்.
இன்று
அதிகமாய்க் குடித்துவிட்டுத் தள்ளாடுகின்றார்.
எல்லாம்
நாகரீக மோகம்
புதுமை மயக்கம்.
வேண்டுமா இத்தகைய விலங்குகள் ?
வேண்டாம்
இதற்கு
இதற்கு முன்பிருந்த
அன்புத்தளைகளே
பரவாயில்லை.
அந்தத் தளைகள்
அவசியமும் கூட.
ஆனால்
இந்தப் பயிர்வேலியால் பயனில்லை.
உடையட்டும் உன் விலங்குகள்.
-- 84 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))