எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

வறுமையின் அஸ்தமனங்கள்.

1983 ஜூலையில் வைகறையின் முதற்பதிப்பில் வெளிவந்தது.

கதவடைப்பு மேகங்கள்
துப்பாக்கித் தூசிகளால்
துளைக்கப்பட்ட போது
சிகப்பு மழைகள்

குப்பையாய் உடல்களும்
உறுப்புகளும் வறுமைக்கடலை நோக்கி
அடித்துச் செல்லப்படும் அவலங்கள்.

இறப்பறியா இனிமைச் சிநேகம்
இவர்களுக்கும் வறுமைக்கும்.

வஞ்சனையில்லாமல் உதவும்
பற்றாக்குறை, பசி, நோய், வறுமை
நண்பர்கள், இவர்களை
என்றுமே கைவிடுவதில்லை,

கலர் காகிதங்களுக்கு அடிமையாகும்
ஆதிக்கக் கழுதைகள்
காட்டும் ஆடுதோடா இலைகளுக்கு
ஏங்கிப் பார்க்கும் மந்தைகள்

ஏழ்மையின் சிரிப்பில்
இறைவனைக் காணலாமாம்
ஏழ்மை சிரித்தால்தானே

திருநாட்டில் திருவை யாரோ
திருடிக்கொண்ட கேவலம்.

காந்தியடிகளின் அஹிம்சையைப்
பின்பற்றும் சத்யாக்கிரகிகள்.

நீங்கள்
பட்டினியாய்க் கிடந்தாலும் சரி
பஞ்சையாய்த் திரிந்தாலும் சரி

உங்களது அஹிம்சை இங்கே
வெல்ல மார்க்கமில்லை,

வாருங்கள் வறுமையை
அஸ்தமிக்க விட்டுப்
புறப்படுங்கள் உதயத்துடன் உறவாட

தலைமைத் தடைக்கற்களைக் களைந்து
மாளிகைகளை உரமாக்கி
அறிவு ஏர் கொண்டுழுது
அன்பு விதைகளை விதைப்போம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...