செடி
கண்டதிசையிலும்
கிளைபரப்புகிறது
ஒழுங்கு
செய்ய வேண்டும்
கொஞ்சம்
உன்
வார்த்தைக்
கத்திரி கொடு
அரிவாள்
தூக்கிக்
கிளைவெட்டு
தளிருக்குக்
காயம்படாமல்
வலி
செடிக்குமட்டுமே
உரிமையுள்ளதாய்
இருக்கட்டும்
தழைக்குப்பைகளை
வாரிக்கொட்டு
செடியின்
கண்படா இடத்தில்.
யுகங்கள்தோறும்
வெட்டுப்படுதலுக்காய்க்
கிளைக்கும்
செடிகள்.***********************
நினைவுகள்
மறக்கப்படவேண்டியவை
கனவுகள்
காணுதல்
கருகுவதற்கென்றே
கருக்கப்படுவதற்கென்றே
-- 83 ஆம் வருட டைரி
-- 83 ஆம் வருட டைரி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))