எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 15 அக்டோபர், 2014

சில்வண்டு.

அவளா சொன்னாள் இருக்காது .. டீக்கடையின் ஓட்டை ரெக்கார்டு திரும்பத் திரும்பக் கதறியது. அவன் உள்ளமும் அதனுடன் சேர்ந்து கதறியது. மனம் திரும்பவும் திரும்பவும் சண்டித்தனம் பண்ணியது ஓட்டை ரெக்கார்ட் மாதிரி.

கோபமும் இயலாமையும் ஆத்திரமும் வெறிகொள்ள வைத்தன. மனம் தன்னிரக்கத்தால் சுயபரிதாபத்தால் கண்ணீரை வழியவிட்டுக் கொண்டிருந்தது.

திரும்பத் திரும்ப வாய்மட்டும் உற்சாகம் கொடுத்துக் கொள்ளுகிற மாதிரி நோ நெவர் நான் அழக்கூடாது நான் ஆண்பிள்ளை. என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தது. வாய்தான் முணகிற்றே தவிர நினைக்கிற நினைப்பு அதற்கு முற்றிலும் மாறாக இருந்தது.

என்னை ஏன் நிராகரித்தாய் காரணம் என்ன எம் காம் வரை படிச்சிருக்கேன். என்கிட்ட படிப்பு பணம் அந்தஸ்து பர்ஸனாலிட்டி இல்லையா. எது இல்லை. உன்னை நான் என்னைக்குமே நோகடிச்சது இல்லையே. புண்படுறாப்புல பேசினது இல்லையே

டீக்கடைச் சந்தடிகள் ஓய்ந்துவிட்டன. சில்வண்டுகளின் ரீங்காரம். ரூமின் தனிமை வாட்டியது. எழுந்தான். நிலைக்கண்ணாடி பிம்பத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டான். தலை வாரப்படாமல் கிடந்தது. முன் நெற்றியில் ஒற்றைச் சுருள் உறவாடியது. ஷேவ் செய்யாமல் முகம் களைபிடுங்கப்படாத நிலமாய் இருந்தது. கண்கள் வீங்கிப் போய் முகம் உப்பிச் சிவந்து இருந்தது.

அன்று ஒரு நாள் சுஜாதா உங்கள் முகத்துக்கு அழகு தருவது இந்த முடிச்சுருள்தான் டியர் என்று கூறித் தலையைக் கலைத்து விளையாடியது நினைவில் ஆடியது.

சண்டாளி முணுமுணுத்துத் தலையை ஓர் உலுக்கு உலுக்கிக்கொண்டான். பால்கனியில் அமர்ந்தபோது தோட்டத்தில் முல்லைக்கொடியின் மணம் நானிருக்கேன் என அறிவித்தது. சந்தன முல்லை என்றால் சுஜாவுக்கு ரொம்பப் பிரியம் என நினைத்துக் கொண்டான். அவள் தன்னை நிராகரித்தது நினைவுக்கு வந்ததும் முரட்டுப் பிடிவாதத்துடன் அவளை நினைவில்  இருந்து விலக்கப் பார்த்தான். இனிப்பைச் சுற்றிச் சுற்றி வட்டமிடும் ஈக்கூட்டம்போல சிந்தனை அவனை விடமாட்டேன் என்று அடம்பிடித்தது.

--- பாதிக்கதைதான் ..1982 இல் எழுதியது டைரியில்... :)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...