சில உரிமைகளும் கடமைகளும்:-
கோபச் சுமைகளால் கனன்று வெடித்துக்
குளிர்ந்து போகிறேன்.
சில மலர்கள் சூடப்படாமலே
உதிரும்போது
சில பட்டச் சிறகுகள்
பலமிழந்து தவிக்கும்போது
சில கடமைகள் செவ்வனே
தட்டிக்கழிக்கப்படும்போது
என்னுள்ளே நலிந்து போகின்றேன்.
சில மாணவ மனங்கள் மனன பாஷையிலேயே
ஊறிக்கிடக்கும்போது
சில வெள்ளித்திரைப் படங்களில்
வெள்ளை மனசுகள்
வெள்ளிவிழா அளவு கண்டு
உள்ளம் வெளிறிப் போகும்போது
சில காப்பிய நாயகர்கள்
களவு நெறியில் திளைக்கும்போது
சில டாக்டர் பட்டங்கள்
சோரம் போகும்போது
கொதித்துப் போகிறேன்.
சில சான்றிதழ்கள்
கற்றை நோட்டுகள் இன்மையால்
இழக்கப்படும்போது
சில பட்டமளிப்புகள் பணத்துக்காக மட்டும்
வழங்கப்படுகின்றபோது
சில சம்பந்தமில்லாத பாடத் திட்டங்கள்
பலனளிக்காமல் போகிறபோது
சில இளமைக் கனவுகள் காகிதங்களின்
நுனிகளால் கலைந்து போகும்போது
நான் மடிந்து போகிறேன்.
---- வைகறை 4 வது செமஸ்டர் இதழில் வெளிவந்தது.
4 கருத்துகள்:
கலைந்து போவது குறித்து மிகவும் வருத்தப்படுகிறேன்...
அருமை
கருத்துக்கு நன்றி தனபாலன் சகோ
நன்றி செந்தில் குமார் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))