எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 22 அக்டோபர், 2011

நிழல்

சாலை விளக்குகள்
மஞ்சள் மழை பொழிகின்றன.,
நண்பர்களைக் கடப்பதுபோல்
நனையாமல் கடக்கிறான் அவன்.,
என்னையும் இழுத்து.

இருட்டு மரங்களை
அலுவலக வேலைகளைப்போல
அங்குலம் அங்குலமாகக்
கடக்கிறான்.,
அவனுள் புதையுண்டு
நானும் கடக்கிறேன்.

உச்சியில் முத்தமிட்டு
நிலவு தழுவுகிறது அவனை
நெகிழ்ந்த காதலியைப் போல்.
பின்தொடரும் என்னைத் தழுவாததால்
கோரைப்பல்லும் கொம்பும்
முளைக்கிறது எனக்கு

6 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

//பின்தொடரும் என்னைத் தழுவாததால்
கோரைப்பல்லும் கொம்பும்
முளைக்கிறது எனக்கு//
THAVARILLAI.... VAALTHTHUKKAL

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சரவணன்..:)

Unknown சொன்னது…

பின்தொடரும் என்னைத் தழுவாததால்
கோரைப்பல்லும் கொம்பும்
முளைக்கிறது எனக்கு...

வால் தூக்கல்...! ஹா.. ஹா..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>பின்தொடரும் என்னைத் தழுவாததால்
கோரைப்பல்லும் கொம்பும்
முளைக்கிறது எனக்கு

வித்தியாசமான கற்பனை.. உம்மாச்சி கண்ணை குத்தப்போகுது ஜாக்கிரதை

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி நீலா.

நன்றி சிபி..:)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...