எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

தீலீபன் முஃபாரிஸ்

உன் சிரிப்பில் முத்துக்கள்

சிதறிக்கொண்டே இருக்கிறது.

கோர்க்க முடியாமல் தடுமாறும் நான்..
******************
உன் சிரிப்பில் இருந்து
அமுதம் வழிந்து கொண்டே
இருக்கின்றது

சாகாவரம் பெற்றுவாழும்
ஆசையில் நான் அதை
அருந்திக்கொண்டே
இருக்கின்றேன்
திலீபன்
உன் சிரிப்பு பெருகிக் கொண்டே போய்
என் முகத்திலும் புன்னகையைப்
பற்ற வைக்கின்றது...

நிமிர்ந்தபோது
ஒரு கோடிச் சூரியன்கள்...
நம்மைச் சுற்றிலும்...

ஆனந்தம் அலைஅலையாய்
உன்னிடம் இருந்து என்னிடம்
பெருகி வருகின்றது...

பிரபஞ்சத்தின் பெருவெளியில்
உன் சிரிப்பே தினமும்
என் சந்தோஷ உணவாக...

நீடூழி வாழ்க கண்மணி..!!!

5 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு எளிதில் கடத்தப்படும் உணர்ச்சி சிரிப்புதான். பிரம்மாதம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள் தேனக்கா...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தீபாவளி வாழ்த்துக்கள்

Avargal Unmaigal சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்

கவிமதி சொன்னது…

எங்கள் செல்லமகன் திலிபன் முபாரிசு குறித்து நீங்கள் எழுதியிருக்கும் கவிதை அருமை.
தேன் அடர்ந்த காட்டுக்குள் பிரவேசிக்கும் உணர்வு எங்களுக்கு.

மிக்க நன்றி
கவிமதி

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கணேஷ்

நன்றி சிபி

நன்றி அவர்கள் உண்மைகள்

நன்றி கவிமதி..:)

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...