'இதுவரை உங்களுக்கு சொல்லப்பட்டதிலேயே மிகச் சிறந்த அறிவுரை எது? எந்த சந்தர்ப்பத்தில், அதை யார் சொன்னார்கள்? அந்த அறிவுரை உங்களுக்கு எந்த விதத்தில் பயன்பட்டது?'
பதில்:- நான் போன வருடம் வலைப்பதிவு தொடங்கி எழுத ஆரம்பித்தபோது நிறைய பதிவர்கள் ஊக்கம் கொடுத்தார்கள். ஆனால் அவர்களில் ஒருவரான திரு செல்வகுமார் ( இவர் நடிகர் ஐஎஸ் ஆரின் புதல்வர்) ., பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தியதோடல்லாமல் இவற்றை குமுதம் ., விகடன் போன்ற இதழ்களுக்கு அனுப்பி வையுங்கள் பிரசுரமாகும் என சொன்னார். அனுப்பினால் பிரசுரமாகுமோ ஆகாதோ என்ற கவலை எனக்கு. ஏனெனில் கல்லூரிப் பருவம் முடிந்து பல வருடங்களுக்குப் பின் எழுதத் தொடங்கியிருந்தேன். ஆனால் ஒரு விஷயத்தை ஒருவர் சொல்லும்போது நம்பத்தொடங்கினீர்கள் என்றால்., அது ஒரு மாஜிக்கல் மிராகிளைப் போல உங்கள் வாழ்க்கையில் நடைபெறும் என்பதற்கு நான் ஒரு உதாரணம்.
விகடன் குமுதம் போன்றவற்றிற்கு படைப்புகளை ஈ மெயிலிலும் அனுப்ப முடியும் எனச் சொன்னார் அவர். தொடர்ந்து அனுப்பத் தொடங்கினேன். பிரசுரமாகிறதோ இல்லையோ தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருந்தேன். நீங்கள் நிச்சயம் அடையாளம் காணப்படுவீர்கள் . எழுத்துத்தான் உங்கள் அடையாளம். அதை ஒருபோதும் சோர்ந்து விட்டு விடாதீர்கள் என்பார். இந்த வருடம் ஏப்ரலிலிருந்து தொடர்ந்து என்னுடைய கவி்தைகள் விகடன்., குமுதம்., குங்குமம்., அவள் விகடன்., கல்கி போன்றவற்றில் வரத்துவங்கின. இனி அடுத்த முயற்சியாக புத்தகம் வெளியிடுங்கள் என சொல்லி இருக்கிறார். கிடைத்த வெற்றிகளில் மகிழ்ந்து தேங்கி விடாமல் அடுத்தடுத்து அடுத்த லெவல்களுக்கு முயற்சித்துகொண்டே இருக்க வேண்டும் என்பது அவரின் மிகச் சிறந்த அறிவுரை. எனவே நல்ல ஆலோசனை சொல்பவர்களை நண்பராக வைத்துக் கொள்ளுங்கள். முடியும் என நம்புங்கள் . அது நடக்கும்.
3 கருத்துகள்:
//நல்ல ஆலோசனை சொல்பவர்களை நண்பராக வைத்துக் கொள்ளுங்கள். முடியும் என நம்புங்கள் . அது நடக்கும்.//
உங்கள் அறிவுரை பதிவை படித்து நீங்கள் கூறியவைகளை நண்பர் சொன்னது போல எடுத்துகொண்டு உங்கள் வழியை ப்லோ செய்கின்றேன்
Akka selva anna is always super :)
நன்றி உண்மைகள்.
நன்றி கயல்.:)
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))