எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 12 அக்டோபர், 2011

நினைவுப் புகைக்கூண்டு..

நினைவுப் புகைக்கூண்டுக்குள்
காற்றுக் க்ரீடை செய்வோம்..
வா..
மனநுனிகள் புகையடிக்காமல்
வெய்யில் சுறா கடிக்க வருமுன்..
சீக்கிரமாய்..
சீக்கிரமாய்..
முகங்கள்
புன்னகைப் பனிக்குள்
உறைந்திருக்கும்போதே
புகைச் சுழலுக்குள்,
ஸ்நேகமாய் ஒருதரம்
முங்குவோம் வா..
மந்தைகளின் கொம்புகளுக்கும்
கூர்பற்களுக்கும் நாம்
இரையாவதற்கு முன்..
தடம் பார்த்து
நமக்குரிய வண்டிகள்
பிடிப்போம் வா..
தார்மீகக் காரணங்கள்
ஆராய்ந்து
ஒற்றுமைகள் புலப்படுத்தி
ஒன்றாய்க் கரைசேருவோம்,
வலைமீளுவோம் வா..
மழையின் அவசரமாய்,
சாகரத்தின் தாகமாய்..
சீக்கிரம்..
சீக்கிரம்..

1 கருத்து:

பால கணேஷ் சொன்னது…

முகங்கள்|புன்னகைப் பனிக்குள் |உறைந்திருக்கு போதே |புகைச் சுழலுக்குள்,| ஸ்நேகமாய் ஒருதரம் |
முங்குவோம் வா..| என்ன அருமையான வரிகள்.. பிரமாதம் தேனக்கா... என்னால் கவிதைகளைப் படித்து ரசிக்கத்தான் முடிகிறது. ம்ம்ம்...

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...