எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 27 பிப்ரவரி, 2012

நம்வாழ்வில்.. வெள்ளைப் பூக்களடி இவை.. கவிதை.கிணற்றடியில் குனிந்து
இருட்டறையில் அடைந்து
உள்நடையில் உடைந்து
தூணோரத்தில் ஒடுங்கிப்
போகும்
வெள்ளைப் பூக்களின்
கலங்கிய சிரிப்புக்களின்
எதிரொலிகள் -- இந்தப் பனித்துளிகளோ.?
மழுங்கிய நினைவுமுனைகளின்
நுனிப்புக்களில் சந்தோஷச் சுவைப்புக்கள்.
சிலநேரம் அசைபோடும்.
கைக்காரியம் பரபரக்கும்.
நிரந்தர இருள்களில்
தலையணை நனைப்புக்கள்.
விடியற்குளிரின்
பிரச்சனை வரவேற்புக்கள்.
நித்யம் நடக்கும்
சத்யசோதனைக்குப் பயந்து
மௌனத் தியானிப்புக்கள்.
குருட்டு நம்பிக்கையின்
கடுவழிப் பயணங்கள்.
கண்டதென்னவோ
கடும் பாலைகள்தான்.
உள்ளத்துள் எரிமலையை
விழுங்கிக் கொண்டு இது
எனக்குச் சுடவில்லையேயென
அக்கினிப் பூக்களைக்
குளிர்வித்துப் பரிமாறும்
”வெள்ளைப் பூக்களடி” இவை.

டிஸ்கி:- இந்தக் கவிதை 1.4.84 நம்வாழ்வு வார இதழில் வெளிவந்தது.

5 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை அருமை
நெஞ்சில் கனலிருப்பினும் இதழில்
பன்னீராய் புன்னகைத்து வாழ்வை ஓட்டும்
பெண்கள் குறித்த கவிதை அருமையிலும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

K.T.ILANGO சொன்னது…

உள்ளத்துள் எரிமலையை
விழுங்கிக் கொண்டு இது
எனக்குச் சுடவில்லையேயென
அக்கினிப் பூக்களைக்
குளிர்வித்து...
அழகு வரிகள்...

K.T.ILANGO சொன்னது…

உள்ளத்துள் எரிமலையை
விழுங்கிக் கொண்டு இது
எனக்குச் சுடவில்லையேயென
அக்கினிப் பூக்களைக்
குளிர்வித்து...
அழகு வரிகள்...

Thenammai Lakshmanan சொன்னது…

மிக்க நன்றி இளங்கோ சார் :)

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...