எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 27 ஜூன், 2014

தேடல்



தேடல்:-
======
யதார்த்த வீணையில்
பற்றுக் கோடுத் தந்தி தடவி
சந்தோஷச் சந்தம்
உருவாக்க முயலும்
மன விரல்

வெள்ளி, 20 ஜூன், 2014

உறவுகள்



உறவுகள்
==========
பறத்தலைக் கற்பிப்பதற்கன்றி
சுமத்தலைச்
சூடக் காத்திருக்கும்;
முறிந்து போகட்டும்
இந்தச் சிறகுகள்.

வெள்ளி, 13 ஜூன், 2014

நம்பிக்கை



நம்பிக்கை
===============
ஒட்டகங்கள் நடந்தன
செருக்காய் …
திமிலில் நீர் சொருகிய
செருக்காய்
ஒய்யாரமாய்
முதுகு வளைத்துக் காண்பித்து,
அலட்சியக் கால் புதைத்து
ஒட்டகங்கள் நடக்கத்தான்
செய்தன.
என்றேனும் ஒருநாள்
பாலையைக் கடப்போமென. 
தினமும் விடியல்
சுட்டுவிட்டுத்தான் சென்றது.
கரைந்து போனது
நீர் மட்டுமல்ல.
திமிலில் திமிறிய
கொழுப்பும் தான்.
குறைந்து போயின
ஒட்டகங்கள்
இருந்தாலும் அவை
நடக்கத்தான் … அல்ல
நகரத்தான் செய்கின்றன
ஒட்டகங்கள்
தள்ளாடும் ஒட்டகங்கள்..

வெள்ளி, 6 ஜூன், 2014

அலைச்சல்



அலைச்சல்
==========
கோயில் முழுக்கக்
குருக்கள்கள்
நீயும் நானும்
தவறுதலாய்த் தள்ளப்பட்டவர்கள்... 

வா....! 

ஒருநாள் கோயில் பார்ப்போம்

கோயில் கழுத்துப்பட்டி பூரா
உபயப் பட்டயங்கள்

கர்ப்பக்ரகம் பக்கத்தில்
தாயத்தில் அடக்கப்பட்டு
ஒரு ரூபாய்க்குள்
உருளும் சாமி.. 

உள்ளே இருப்பது
சிலையா ? கூடா.. ?

சுவாமி நம் கையில்!
சீக்கிரம் வா!
வெளியே போய் சுவாசிக்கலாம்!.

Related Posts Plugin for WordPress, Blogger...