எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 31 ஜூலை, 2016

ஐக்கஃப். AICUF.



தென்றல் வீணையின்
நரம்பு தேடும்
மாலை நேரத்தில்
புதிய அரும்புகளுக்கு
மனம் முகிழ்த்த வணக்கங்கள்
மலர்ந்த மலர்களுக்கும்தான்.
        
இது சங்கம் வளர்த்துச்
செழித்த மதுரையில்
தமிழ் வளர்க்கும்
ஃபாத்திமா விருட்சத்தில்
தமிழ் பயின்ற குயிலின் கீதம்.
சோக கீதமல்ல. இனிய கீதம்தான்
இன்ப நாதம்தான்

அலுத்திருக்கும் உங்களைக்
கழுத்தறுக்க வரவில்லை
இன்று உங்களுக்கு ஆரம்பநாளை
ஆரம்பிக்கத்தான் வரவேற்கத்தான்
கனிவாய் வழிகாட்டத்தான்
வந்திருக்கிறேன்.

AICUF என்னும் சங்கம் பற்றி
அறிந்து கொள்ளும் புனித நாள்.

அந்த நாள்
மனங்களை உணர்ந்தபின்
மதங்களுக்கு அர்த்தமில்லை
என்று உணர
சமய வேறுபாடின்றி அனைவரையும்
ஒன்று சேர்க்கும் நன்னாள்.

AICUF இன் முயற்சியால்
நம்பிக்கை ஒளியாய்
வைகறையின் உதயம்.

முட்களின் குத்துப்பட்டாலும்
ரோஜாக்களைப் பிரசவிக்கக்
கற்றுத் தருவது AICUF.

பரந்த எண்ணங்களைப்
பகிர்ந்து கொள்ளும்
சிந்தனைக் கருத்தரங்குகள்
உண்டு இங்கே !.

மலட்டு மனிதச் சிப்பியிலும்
எண்ண முத்துக்களை
மலரச் செய்வதுதான் AICUF.

மதத்தைப் பார்க்காமல்
மனிதனை மனிதனாய்ப்
பார்ப்பதுதான் AICUF.

எல்லார் மனதிலும்
பொறுப்புண்டு என
செயல்பட வைப்பதும்
AICUF.

உங்களுக்கும் பொறுப்புகள்
கூடுகின்றன.
இந்நாளில் இருந்து
அதன் அங்கமாய் மாறும்
பெரும்பேறு உங்களுக்கு.

இந்த நாள் முதல்
இருக்கும் நாள் வரை
ஆணிவேரைச் செப்பனிட்டு
வைத்துள்ளோம்
சிந்தனைக்காய்களை
எறிந்துள்ளோம். 

சிந்தனைச் சுழிகள்
அடங்குவதற்கு.
நாங்கள் எறிவது
குளத்திலல்ல.
உங்கள் மனத்தில்

காய்களைக் கனிகளாய்ப்
பழுக்கவைக்கும் பொறுப்பு
உங்கள் கரத்தில்.


இந்த இனிய மாலையில்
இன்ப கீதங்களில் பிரியமான
வரவேற்பு வாழ்த்துக்களைப்
பகிர்ந்துகொண்டு
என் கவியுரையைத்
நிறைவாய்த் தருகிறேன்.
அன்பு வணக்கம்.

-- 84 ஆம் வருட டைரி.

வெடிக்கத் தொடங்கும் எரிமலைகள்



வெடிக்கத் தொடங்கும் எரிமலைகள்

குருஷேத்திரக் கண்ணனை எதிர்பார்த்து இந்த மாணவ அர்ஜுனர்கள் தவங்கிடக்கப் போவதில்லை. வெடிக்கத் தொடங்கும் இந்த எரிமலைகள் இன்று நேற்றுக் கனிந்தவை அல்ல. இவை நீறு பூத்த நெருப்புகள்.

சீன் – 1. இண்டர்வியூ.

சீன் 2.

வேலையில்லா இளைஞர் சங்க மாநாடு முடிந்து தலைவனும் மிதவாதிகளின் பிரதிநிதியும் தீவிரவாதிகளின் பிரதிநிதியும் செயற்குழுக் கூட்டம் வைக்கின்றார்கள் ஒரு கம்ப்யூட்டரால் 400 பேருக்கு வேலை போனதைக் குறித்து விவாதிக்கின்றார்கள்.

888888888888888

இந்த மாணவ அர்ஜுனர்கள் ஏந்தி இருப்பது காண்டீபம் இல்லை. வெட்டரிவாள்கள்தான். இவர்களின் வானில் நட்சத்திரச் சிமிட்டல்கள் இல்லை. தகிப்புச் சூரியன்களின் ஆக்கிரமிப்புக்கள்தான். இவர்கள் வெடித்துக் கொண்டு இருக்கும் எரிமலைகள். இதற்குப் பின்னாவது இருள்போர்த்திய பள்ளத்தாக்குகள் ப்ரகாசம் பெறலாம்.

--85 ஆம் வருட ஹாஸ்டல் நாடகம். 

சனி, 30 ஜூலை, 2016

எத்துணை ப்ரிய ஸ்நேகம் நமது.



எத்துணை ப்ரிய ஸ்நேகம் நமது.

எத்துணை ப்ரிய ஸ்நேகம் நமது.
அரும்பும் மொட்டின் பரவஸமாய்
ரோஜாவுக்குப் பாவாடை கட்டிவிடும் பனித்தூவலாய்
வாலசைத்துத் திருட்டுமுழி முழிக்கும் மைனாக்குஞ்சாய்
அதன் புருவத்துக்கு மஞ்சளில் போட்ட ஐப்ரோவாய்
இரட்டைவாலில் யூனிஃபார்மில் திரியும்
குட்டிப்பெண்ணின் பரபரப்பாய்,
இங்கைத் தன்னுள்ளே பரத்திக் கொள்ளும்
ப்ளாட்டிங் பேப்பராய்,
எண்ணக் கிறுக்கல்களை எழுத்தாய்ப்
பொறிக்கும் கையசைப்பாய்,
அரிக்கேன் விளக்கு மாட்டிய
கிராமப்புற ஒற்றை மாட்டு வண்டியாய்,
குழாயிலிருந்து வெடிபட்டுச் சிதறும்
பன்னீர்ப் பூச்சிலும்பலாய்
ஒதுக்க ஒதுக்கக் கூத்தாடும்
நெற்றியின் ஒற்றைச் சுருள்முடியாய்க்
கைகளைத் தட்டிவிட்டுக்கொண்டு
பரிட்டைக்குப் புறப்படும் மாணவனாய்
மாலைநேரத்தில் ஓடிபிடித்து விளையாடும்
இரயில்பெட்டிகளாய்
கைகோர்த்து உலாவரும் கீரிடம்சூட்டிய
மழை மகாராணிகளாய்
நடுமத்யானம் கண்ணை நிறைக்கும்
நீலநிற ஆகாயமாய்
எண்ண வளையத்துள் அக்கினிக் குளிராய்
சொல்லச் சொல்லச் சலிக்காத முருகஜெபமாய்
சேவலின் அகங்காரக் கொண்டையசைப்பாய்
பெட்டையின் அடங்கின பணிவாய்
கண்ணாடி வளையல்களின்
லயம்தப்பின ஜலதரங்கமாய்
எத்துணை ப்ரிய அரிய இனிய ஸ்நேகம் நமது. !!!.

 -- 85 ஆம் வுடைரி

வியாழன், 28 ஜூலை, 2016

முத்தத் தொற்று.

நினைவுகளின் மிச்சங்களிலிலிருந்தும்
வாசனைகள் தோன்றுகின்றன.
ஒருமுறை டால்கம் பவுடராக
ஒருமுறை குளியல் சோப்பாக
ஒருமுறை வாசனைப் பாக்காக
ஒருமுறை டர்க்கி டவலாக

காலியான பீர் கோப்பைகளும்
கடலை சிதறிக்கிடந்த தட்டும்
குறுக்கு மறுக்காகக் கிடக்கும் ரிமோட்டும்
கொழுக்கட்டையான தலையணையும்
சரிந்துகிடக்கும் குஷன் கவர்களும் கூட
வாசனைகளால் நிரம்பி இருக்கின்றன.

ஒரு முறை பேய் பற்றிய கதை ஒன்று கூட
உன்னை ஞாபகப்படுத்தியது.
அதே பக்கத்தில் கலங்கலாக நான்
உன் தோளில் தொற்றியிருப்பதான
ஒரு சித்திரமும் கூட
உன் வாசம் சுமந்த வேதாளமாய்
உன் முத்தத் தொற்றுக்கள் பற்றுக்கோடாய்.

புதன், 27 ஜூலை, 2016

இனிமையாய்க் கோபப்படக் கற்றுக்கொள் :-



இனிமையாய்க் கோபப்படக் கற்றுக்கொள் :-

இனிமைச் சரிவாய்க் கோபப்படத் தெரியுமா உனக்கு ?
கண்ணும் மூக்கும் துடித்துச் சிவக்க
,மௌன ஆக்ரோஷமாய்க் கோபப்படத் தெரியுமா ?
மூக்கு விடைக்க நொறுக்கும் விரைப்பில்
கைகள் நெரித்துக் கொள்ள
எண்ணையில் போட்ட கடுகின் அவசரமாய்ப்
பொரியத் தெரியுமா உனக்கு ?
தக்காளிச் தீச்சலின் செகப்பாய்
மிளகாயின் கார நெடிப் படுமையாய்
சடசடக்கும் கறிவேப்பிலை மணமாய்க்
கோபப்படத் தெரியுமா உனக்கு ?
மின் விசிறியின் வெம்மைத் தகிப்பாய்
வெகுளத் தெரியுமா உனக்கு?
பொய்க் கோபமாய் மனசைத் தொடாத
முக எரிச்சலாய், சிடுசிடுமூஞ்சியாய்
எரிமலை வெடிப்பாய் கோபப்படத் தெரியுமா உனக்கு?
சீக்கிரமாய்க் கோபப்படக் கற்றுக் கொள்
இல்லையேல் உன்னை நீயே
மறந்து இழந்து போய்விடுவாய். !

-- 85 ஆம் வுடைரி

Related Posts Plugin for WordPress, Blogger...