நன்றி சமர்ப்பணம். நடிகர்களுக்கு.
வேஷதாரிகள்.
தூரத்து ட்ரெயினின் நெற்றி மஞ்சளாய்ச்
சில அறிமுக வெளிச்சங்கள்
கடகடத்து ஓடிவந்து
கையைப்பிடித்து உச்சி முகரும்.
என்னைப் பூரணமாய்த் தெரியப்படுத்தியபின்
வெளிச்சம்பட்ட பனித்துளியாய்
இறுகிக் கொள்ளும். இறுக்கிக் கொள்ளும்.
வேஷதாரிகளிடம் சிரித்து
வேஷதாரிகளிடம் கோபப்பட்டு
வேஷதாரிகளிடம் வாழ்ந்துவந்த ஒருவனிடம்
புதிதாய் வந்து ஒட்டிக்கொண்டு
சினேகத்தைப் பரப்பிய மனிதனே
புதிதாய் முக்காடுபோட ஆரம்பித்தால்
ஆமாம்
அந்தக் கடவுளே ஒரு
பல வேஷதாரிதானே.
-- 85 ஆம் வருட டைரி.
-- 85 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))