நம்பிக்கைகள் :-
சில நம்பிக்கைகள் அந்த
ஒற்றை நட்சத்திரமாட்டம்
மனவானில் மின்னிக்கொண்டிருக்கின்றன.
எதிர்கால இந்திய இளைஞனின்
எதிர்பார்ப்பின் சின்னமாய்
நாலுபிள்ளை பெற்றுவிட்ட
அன்னைகளின் எதிர்பார்ப்பாய்
கன்னியரின் காலக் கனவின் ஒளிப்பிழம்பாய்
குழந்தைகளின் விளையாட்டுச் சிட்டியாய்
ஏழைகளின் ராக்காலக் கனவாய்
இரவுடனே அந்த நம்பிக்கை நட்சத்திரமும்
அடுத்த ஊருக்கு நம்பிக்கை சொல்ல
டாட்டா காட்டுகின்றது.
-- 82 ஆம் வருட டைரி
-- 82 ஆம் வருட டைரி
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))