அமாவாசை மனசு :-
மாலை நேரத்தில்
சாலையோரத்து இருந்த
சோலை மூலையில்
மூக்குத்திப் பூக்களின் முக்காட்டுக்குள்
புதைந்து கிடந்த கருப்பன்
தன் காதலி மதியழகியிடம்
அசடு வழிந்தான்.
என் மனசு அமாவாசை
காதல் நிலா உன்னைத்தவிர
யாருக்கும் இடமில்லையென்று.
கேட்டாளோ இல்லையோ
சீறிப்பாய்ந்தாள் மதியழகி
பொய்தானே இது
உண்மையென்றால்
இத்தனை நட்சத்திரப்பெண்களுக்கு
எப்போது இடம் கொடுத்தீர்.
பொய்யென்றாலும்
உண்மையென்றாலும்
தப்பாய்ப் போய்விடும்.
மக்குக் கருப்பன்
திருதிருத்துக்கொண்டிருந்தான்.
பாவம் விட்டுவிடுவோமே.
-- 85 ஆம் வருட டைரி
-- 85 ஆம் வருட டைரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))