நீதியே! உனக்கு இன்னுமா உறக்கம். – 2
நீதியை எங்கோ விற்கின்றார்களாமே
சகாய விலைக்குக் கொஞ்சம் கூடுதல்தானாம்
பணம் கொடுத்தால் ரேஷன் கார்டு
இல்லாமலேயே கொடுக்கின்றார்களாம்.
அது விற்கும் கடைக்குப் பெயர் ”நீதிமன்றமாம்”.
ஏழ்மையின் சிரிப்பில் இறைவனைக் காணலாமாம்
அதனால்தானோ என்னவோ
ஏழ்மை சிரிப்பதற்கு இத்தனை தடங்கல்கள்
ஏழ்மை சிரிப்பையே மறந்துவிட்டது.
மறுதலித்துவிட்டது.
ஏழ்மையின் கண்ணீர் பாவத்தைச் சுடுமாம்.
பாவம் செய்தவர்களை அல்லவே.
பணக்காரர்கள் பாவத்தை ஒட்டுமொத்தமாய்
வாங்கிக் கொண்ட கூட்டு (மொத்த ) வியாபாரிகள்.
நியாயம் உறங்குகின்றது பணக்காரர்களின் பெட்டகங்களில்
அதன் உறக்கம் எப்போது கலையும். ?
அதைக் கலைக்க ஏழ்மையால் இயலுமா ?
கொஞ்சம் சொல்லுங்களேன். !?!
-- 85 ஆம் வருட டைரி.
-- 85 ஆம் வருட டைரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))