இனிமையாய்க் கோபப்படக் கற்றுக்கொள் :-
இனிமைச் சரிவாய்க் கோபப்படத் தெரியுமா உனக்கு ?
கண்ணும் மூக்கும் துடித்துச் சிவக்க
,மௌன ஆக்ரோஷமாய்க் கோபப்படத் தெரியுமா ?
மூக்கு விடைக்க நொறுக்கும் விரைப்பில்
கைகள் நெரித்துக் கொள்ள
எண்ணையில் போட்ட கடுகின் அவசரமாய்ப்
பொரியத் தெரியுமா உனக்கு ?
தக்காளிச் தீச்சலின் செகப்பாய்
மிளகாயின் கார நெடிப் படுமையாய்
சடசடக்கும் கறிவேப்பிலை மணமாய்க்
கோபப்படத் தெரியுமா உனக்கு ?
மின் விசிறியின் வெம்மைத் தகிப்பாய்
வெகுளத் தெரியுமா உனக்கு?
பொய்க் கோபமாய் மனசைத் தொடாத
முக எரிச்சலாய், சிடுசிடுமூஞ்சியாய்
எரிமலை வெடிப்பாய் கோபப்படத் தெரியுமா உனக்கு?
சீக்கிரமாய்க் கோபப்படக் கற்றுக் கொள்
இல்லையேல் உன்னை நீயே
மறந்து இழந்து போய்விடுவாய். !
-- 85 ஆம் வருட டைரி
-- 85 ஆம் வருட டைரி
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))