எத்துணை ப்ரிய ஸ்நேகம் நமது.
எத்துணை ப்ரிய ஸ்நேகம் நமது.
அரும்பும் மொட்டின் பரவஸமாய்
ரோஜாவுக்குப் பாவாடை கட்டிவிடும் பனித்தூவலாய்
வாலசைத்துத் திருட்டுமுழி முழிக்கும் மைனாக்குஞ்சாய்
அதன் புருவத்துக்கு மஞ்சளில் போட்ட ஐப்ரோவாய்
இரட்டைவாலில் யூனிஃபார்மில் திரியும்
குட்டிப்பெண்ணின் பரபரப்பாய்,
இங்கைத் தன்னுள்ளே பரத்திக் கொள்ளும்
ப்ளாட்டிங் பேப்பராய்,
எண்ணக் கிறுக்கல்களை எழுத்தாய்ப்
பொறிக்கும் கையசைப்பாய்,
அரிக்கேன் விளக்கு மாட்டிய
கிராமப்புற ஒற்றை மாட்டு வண்டியாய்,
குழாயிலிருந்து வெடிபட்டுச் சிதறும்
பன்னீர்ப் பூச்சிலும்பலாய்
ஒதுக்க ஒதுக்கக் கூத்தாடும்
நெற்றியின் ஒற்றைச் சுருள்முடியாய்க்
கைகளைத் தட்டிவிட்டுக்கொண்டு
பரிட்டைக்குப் புறப்படும் மாணவனாய்
மாலைநேரத்தில் ஓடிபிடித்து விளையாடும்
இரயில்பெட்டிகளாய்
கைகோர்த்து உலாவரும் கீரிடம்சூட்டிய
மழை மகாராணிகளாய்
நடுமத்யானம் கண்ணை நிறைக்கும்
நீலநிற ஆகாயமாய்
எண்ண வளையத்துள் அக்கினிக் குளிராய்
சொல்லச் சொல்லச் சலிக்காத முருகஜெபமாய்
சேவலின் அகங்காரக் கொண்டையசைப்பாய்
பெட்டையின் அடங்கின பணிவாய்
கண்ணாடி வளையல்களின்
லயம்தப்பின ஜலதரங்கமாய்
எத்துணை ப்ரிய அரிய இனிய ஸ்நேகம் நமது. !!!.
-- 85 ஆம் வருட டைரி
-- 85 ஆம் வருட டைரி
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))