எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 1 ஜூலை, 2016

வயசுக் கோளாறு :-



வயசுக் கோளாறு :-

இவன் பக்கவாட்டில்
மன்மத நடைபயின்றபோது
அந்தக் கட்டைவண்டி
நகரத்து மினுக்கிகள்போல
இடுப்பை ஆட்டி ஆட்டி நடந்தது.
கிராமத்துச் செழுமைகள் போல
இடைய ஒசியவிட்டு
அச்சாணியில் கட்டிய
தண்டைகள் கொலுசுகள்
கிணுகிணுக்க ஒய்யாரமிட்டது.
சிவப்பு விளக்கை மேலே மாட்டிக்கொண்டு
இராத்திரி நேரத்தில்
மண்ணெண்ணெய்க் குறையால்
கண்ணடித்து கண்ணடித்து
அழைத்துக்கொண்டே திரிந்தது.
மயங்கிப் போன இவன்
அதன் பக்கம் நெருங்கி
இடைபற்றிப் போகாத
ஊருக்கு வழிகேட்டான்.
உடனே அதன் மேலேயிருந்து
ஒரு குரல் வந்தது.
”இடை பற்றி வழிகேட்டால்
காவல்நிலையம் போகலாம்.
இதை நீங்கி மேல்வழி செல்றால்
சங்கராபுரத்துச் சாமியார்மடம் வரும்” என்று.

--  84 ஆம் வுடைரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...