முடிந்துபோன கதை ஒன்றின்
இரண்டாம் அத்யாயம்
ஆரம்பமாகிவிடுமோவென்று
பயமாய் வந்தது.
மீண்டும் முன்போல்
சுயகம்பீரம் அழிந்து
கரைந்து போய்விடுமோ
நிழலைப் பிடிக்கும் ஆவலில்
வெளிச்சத்தையே
காணாமற்போக்கி விடுவோமோ
கால ஓட்டத்தில் நசிந்துபோகும்
பலவீன உணர்வுகள் கலங்கவைக்கின்றன.
அன்பு காட்டினால் பரிசாகக் கிடைப்பது
அதுதான் என்ற பொய்க்கருத்தை
மனசில் புகுத்திய
மொழிகள் அனைத்தும் பொய்யோ.
--85 ஆம் வருட டைரி
--85 ஆம் வருட டைரி
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))