எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 3 ஜூலை, 2016

புதியதோர் காதல் செய்யலாம்.



புதியதோர் காதல் செய்யலாம் :-

புதியதோர் காதல் செய்யலாம்
வருகின்றாயா அன்பே..!
கைகளோடு கைகள் தொடாமல்
கால்களோடு உறவாடாமல்
நகநுனிகளை ஆராயாமல்
மனசும் கண்ணும்
கதைபேச கதைபேச
புதிதுபுதிதாய்ப் பரவஸப்பட
சின்னச்சின்னச்
சந்தோஷங்களில் சிவந்துபோக
நான் நாணித் தலைகுனிய
நீ நான் என நிமிர்ந்து நிற்க
கறுப்பு வானின்
வெள்ளைப் பொத்தல்களின் கீழ்
பச்சைமடி விரிப்பிலமர்ந்து
ப்ரியங்களுடன் பசுமைப் பார்வையாய்
ரசித்து ருசித்து நினைத்து நினைத்து இனிக்க
புதியதோர் காதல் செய்யலாம்
வா என்னருமை அன்பே. !
யுகம் யுகமாக இனிமை
நெஞ்சுப் பொதி நினைவுகளில்
அமிழ்ந்து அமிழ்ந்து
மதுரக்காதல் செய்ய
வந்துவிடேன் என் அன்பே. !

-- ிஹி 82 ஆம் வுடைரி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...