எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 ஜூன், 2016

மானசீகம்.



அவசியமில்லாதவள்:-

உங்களுக்கு நான்
இப்போது அவசியமில்லாதவள்
என்றெனக்குத் தெரியும்
ஏனெனில்
உங்கள் அத்யாவசியங்கள் முடிந்தபின்
நானொரு பொருட்டா என்ன?..

****************************************

இளமையின் நனைப்பினூடே
கலங்கிப் போகும் சாம்ராஜ்யஙகள். 


நிலவுக்குத்தான்
வளர்ச்சியும் தேய்வும்
உண்டு என நினைத்தேன்.
ஆனால் சந்திரனே
உன்னுடைய அன்புக்குமா அப்படி. 

*****************************************


ஆகாயத்தை அண்ணாந்து
பார்க்கும்போதுதான் தெரிந்தது.
நாம் எவ்வளவு பெரிய
உலகப்பள்ளத்துக்குள்
விழுந்து கிடக்கின்றோமென்று.
**********************************

மானசீகக் காதல் :-

அவன் புலம்பல்
அர்த்தமற்று அவலப்பட்டுச்
சிதறிப் போயிற்று.
”அவன் மனக் காதலியாயிருந்தால்
இந்நேரம் கொலைசெய்திருப்பேன்
ஆனால் பாவிமகள் என்
மானசீகக்காதலியாயிற்றே” என்று.
 *****************************

-- 82 ஆம் வருட டைரி. 

புதன், 29 ஜூன், 2016

பாவம்..



வானத்துச் சிறுக்கியிடம்
வீழ்ந்தடித்துச் சென்று சென்று
கால்தேயப்போய்
சந்திரன் பெற்றதென்ன
பெருவியாதியா ?
குறைந்து குறைந்து
ஒன்றுமில்லாமல்
போய்விட்டானே
இந்த அம்புலிமாமா..
அடப்பாவமே. !

--- 83 ஆம் வுடைரி.

செவ்வாய், 28 ஜூன், 2016

இப்போது.



இப்போது

உன் அன்பு ஆவேசமாக
இருப்பதால்தான்
என்னால் அதை
ஏற்றுக்கொள்ளச் சத்தில்லை.
நீ என்னை எப்போதும்
வலியுறுத்திக்கொண்டே இருக்கிறாய்
கனவிலும் நனவிலும்
வந்து வந்து உனதன்பை
ஏற்றுக் கொள்ளும்படி. !
என்னால்தான் அதை
ஏற்றுக் கொள்ளத் தென்பில்லை.
நான் உன்னிடம் நடிக்கின்றேன்
சாமர்த்தியமாய்.
என்னை நானே
பாராட்டிக் கொள்கின்றேன்
என் திறமைக்காக.
இதனால் நீ புண்பட்டுப் போவதைப்
பார்த்தும் வாளாவிருக்கிறேன்.
நீ என் மனதிடம் அது
இளகி இருக்கும்போது கேட்டுப் பாரேன்.
அது எப்போதும் தன்
கடினத்தன்மையிலிருக்கும் போதும்
உனக்காக உருகிக் கொண்டிருப்பதை
உணர்ந்து கொள்வாய். !
நீ உணரவேண்டும் என்பதுதான்
என் விருப்பம்.

-- 85 ஆம் வுடைரி. 

Related Posts Plugin for WordPress, Blogger...