உனக்காகத்தான் அன்பே..!
******************************************
******************************************
உன் ஆத்மார்த்தப் பார்வையைத்
தரிசிக்கவேண்டித்தான் அன்பே!
நான் தினமொரு பரிசு வாங்கி
உன்னைப் பரவஸிக்க வைக்க ஆசைப்படுகிறேன்.!
தென்றலது என்னை நாடி
ஓடிவந்து சொன்னது,
” ஏன் என்னை வெறுக்கிறாய்
?” என்று.
என்ன பதில் சொல்வது
என்று யோசிக்கிறேன்.
~~~~~~~~~
என் உயிரைக் கொடுத்தாவது அன்பே!
உன்னை ஆதர்ஷிக்க விரும்புகிறேன்.
பீரிடத் துடிக்கும் என் அன்புக் குரலை
என் மனக்கைகளே இழுத்துப் பொத்தி
மூடுவதால்தானோ என்னவோ
தொண்டைக்குழிக்குள்ளே நான் அமுக்கப்பட்டு
அமுக்கப்பட்டு அடங்கிப் போகின்றேன்.
கல்லாய்க் கடினப்பட்டுப்போகின்றேன்.
---- 84 ஆம் வருட டைரியிலிருந்து.
2 கருத்துகள்:
அருமை! வாழ்த்துக்கள்!
நன்றி சுரேஷ் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))