எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 14 ஜூன், 2016

மேகத்தின் தாகம். :-



மேகத்தின் தாகம். :-

மேகப் பெண்ணே !
உன் காதலன் உன்னைப் பிரிந்து
எங்கே போய்விட்டானென்று
இப்படி அழுதழுது
உன்னையே நீ
மாய்த்துக் கொள்கின்றாய் >
உன்னுள்ளே அவ்வளவு
துக்கத்தையும்
அடக்கியடக்கிவைத்துக்
கொண்டிருந்தாயோ ?
நீ வெடித்து
அழும்போது தோன்றும்
சப்தம்தான் இடியோ ?
நீ வாய்விட்டு அலறிக்
கதறும்போது
தெரிகின்ற பல்வரிசைதான்
மின்னலோ ?
உன் மனதில் உள்ள கவலைக்
கருமைகள் எல்லாம்
கண்ணீராய் வடிந்தபின்
உன் மனம்
தும்பைப்பூவாய்
பஞ்சுப் பொதியாய்த்
தூய வெள்ளையாகி விட்டதோ ?
மேகப் பெண்ணே!
மன உறுதியை மட்டும்
பற்றுக்கோடாய் உன்னுடன்
எப்போதும் வைத்துக் கொள்.
என் போல்
ஒருபோதும் கோழையாகிவிடாதே.

-- 85 ஆம் வருட டைரி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...