என் சிறு வர்ணனை :-
இந்த அமைதியான இரவில்
வானத்துக் கோலங்கள்
விண்மீனின் ஜாலங்கள்
கார்முகிற் கூட்டங்கள்
கானமயிலாட்டங்கள்
தேனூறும் சிறுபூக்கள்
தேவையில்லா வசந்தங்கள்
எந்தன் சிறு எண்ணங்கள்
ஏற்றமிகு வண்ணங்கள்
நான் விரும்பும் வரங்கள்
என் இதய ஸ்வரங்கள்.
மௌனமொழி பாஷைகள்
அலை ஓய்ந்த ஓசைகள்
நிறைவேறா விருப்பங்கள்
எந்தன் பேராசைகள்.
-- 85 ஆம் வருட டைரி.

1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))