எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 10 செப்டம்பர், 2014

உதிரிகள்



ஜன்னல்கள்  கண்ணடித்ததால்
குப்பைத் தொட்டிகள் கண்ணீர் வடிக்கின்றன.
                       * * *
பொய்யரசனின் அந்தப்புரத்தில்
உண்மைகளின் ஊமைத்தனம்
வாய்மைகளின் புறக்கணிப்பு.
                     * * *
கொலையரசன் மஞ்சத்தில்
மண்டைக்காடு தஞ்சம்
அவன் மடிகளில் குளிர்காய்ச்சல்.
                   * * *
ஸ்லிப்பர் :- தோலும் மரமும் சந்தித்துக்கொண்டதால் உண்டாகி திடீர் ஸ்ட்ரைக் பண்ணும் இந்தியத் தொழிலாளி.
                     * * *
நாட்காட்டிகள்:- தினமும் துகிலுரியும் அபலைப் பாஞ்சாலிகள்.
                     * * *
சொந்தங்கள் எப்போதும் தொடர்கதையாம். சுத்தப் பேத்தல்.
உறவுகள் என்றாலே உரசல்கள்
பந்தங்கள் என்றாலே புதைகுழிகள்.
சேற்றுக் குழம்புடன் சம்மந்தம் பண்ண
சந்தோஷம் இவ்வளவா
குட்டையில் ஊறிய மட்டைகள்
எனத் தெரிந்தும் பிய்த்துப்பார்ப்பது முட்டாள்தனம்.

--- -- 82 ஆம் வருட டைரியிலிருந்து :) 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...