இறைவன்  படைப்பினில் 
எதுவுமே இன்பம். 
குட்டிப் பாதத்தால் 
தட்டுத் தடுமாறி வரும் 
குழந்தை இன்பம். 
மக்களை 
மிருகக்காட்சி சாலையின் 
கூண்டுகளாட்டம்
அடைத்துச் செல்லும் 
புகைஇரதத்தின் 
வளைந்த நடை இன்பம். 
ரோஜாவில் மிதக்கும் 
காலைநேரப்
பனித்துளி இன்பம். 
கடலுடன் சங்கமிக்கும் கதிரவன் 
காட்சி இன்பம். 
நம் துன்பத்தில் 
கடவுள்
கைகொடுத்து உதவுகின்றானே 
அது பேரின்பம்.
 
  

3 கருத்துகள்:
நம் துன்பத்தில்
கடவுள் கைகொடுத்து உதவுகின்றானே
அது பேரின்பம்.//
உண்மை.
அருமையான கவிதை.
நன்றி கோமதி மேம்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))