எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

மொக்கைக்கெல்லாம் முன்னோடி நாங்க. அப்பவே அப்பிடி.. :)

சின்ன வேலை:-

என் ஃப்ரெண்ட் ஜோதி கேட்டாள் ஏண்டி உன்னால இந்தச் சின்ன வேலையக் கூடவா செய்யமுடியலைன்னு. நானும்தான் கேக்குறேன். ஏங்க என்னால இந்தச் சின்ன வேலையைச் செய்யமுடியலைன்னு. பிறகு நான் அவளிடம் சொன்னேன். ஏண்டி என்னாதான் இந்தச் சின்ன வேலையைச் செய்யமுடியல. நீதான் என்னைவிடப் பலமானவளாச்சே. நீயாவது இந்தச் சின்ன வேலையைச் செய்யக்கூடாதான்னு. நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணா நான் இந்தச் சின்ன வேலையை ரொம்பச் சீக்கிரமாய் முடிச்சுருவேன் அப்பிடீங்கிறேன். உடனே அவ இந்தச் சின்ன வேலையை முடிக்க நானும் கூட வேணுமாக்கும். ?
இந்தச் சின்னவேலையைச் செய்ய இவ்வளவு வயசுள்ள பெண் சிரமப்பட்டா சிரிப்பாங்க.. ! அதோட நான் வேற உங்கூட கூட்டா வந்து இந்தச் சின்ன வேலை செய்யத் துணைபுரியணுமாக்கும். அப்புறம் இந்தச் சின்னவேலையைச் செய்ய இரண்டு பேரான்னு கேலி பண்ணுவாங்கன்னா. நானும் கூட யோசித்துப் பார்த்தேன். இந்தச் சின்ன வேலையைச் செய்ய நான் இவளோட ஹெல்ப்பைக் கேக்கணுமாக்கும். இந்தச் சின்ன வேலையை என்னால செய்யமுடியாதா. ? ஏன் முடியாது.? என்று எனக்குள்ள அறைகூவல் விடுத்துக்கிட்டு கடைசியா அந்தச் சின்ன வேலையைச் செய்யத் துவங்கிட்டேன். முடிச்சபின்னாடிதான் தோணுது. சே எவ்ளோ சின்ன வேலைன்னு. :)

டிஸ்கி :- ஐயோ அறுவை, மொக்கை என்று நீங்கள் அலறுவது கேட்கின்றது. இது கல்லூரிப்பருவத்தில் நடந்த ஒரு காம்பெடிஷனில் ( பிக் போர் என்று பேர் BIG BORE )  பேசியது. :)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...