புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

திங்கள், 13 ஏப்ரல், 2015

கூட்டை உடைப்ரிய நண்பனே !
வெற்றுப் பார்வையை
உதறிவிட்டுக்
காற்றுடன் வாசகம் பேச
எப்படி முடிகிறது உன்னால் ?

சூன்யத்தில் பார்வைகுத்தி
சூன்யத்திலேயே மீண்டு
யாருக்காகச் செய்கிறாய் தவம் ?

எந்தச் சூன்யத்துள்
வரையப்பட்டுக்கொண்டு
இருக்கிறாள் உன்
ப்ரிய தேவதை. ?

நண்பனே’
விழித்துப் பார்
நம்மைச் சுற்றிலும்
மரங்கள் மரங்கள் மரங்கள்
சின்னக் கீற்றுகளாய்
வெளிச்சங்கள்

இலைகளும் பூக்களும்
போர்த்திய வெற்று மரங்கள்.

ஏனிந்த சோகம்பீடித்த
சிறுவன் பார்வை
ப்ரியங்களைப் புரிந்துகொள்ளாத
பார்வை பார்க்காதே

நண்பனே
கூட்டை உடைத்து வெளியே வா
ஸ்நேகிதம் புரிந்துகொள்.

டிஸ்கி :- 85 ஆம் வருட டைரி

6 கருத்துகள்:

yathavan nambi சொன்னது…

அன்பு சகோதரி
வணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக!

நித்திரையில் கண்ட கனவு
சித்திரையில் பலிக்க வேண்டும்!
முத்திரைபெறும் முழு ஆற்றல்
முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


மன்மத ஆண்டு மனதில்
மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
மங்கலத் திருநாள் வாழ்வில்!
மாண்பினை சூட வேண்டும்!

தொல்லை தரும் இன்னல்கள்
தொலைதூரம் செல்ல வேண்டும்
நிலையான செல்வம் யாவும்
கலையாக செழித்தல் வேண்டும்!

பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!

புதுவை வேலு

Thenammai Lakshmanan சொன்னது…

மிக மிக அருமையான வாழ்த்துக்கு நன்றி வேலு சகோ.

உங்களுக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் . ! பொங்குக மங்கலம். !

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)

KILLERGEE Devakottai சொன்னது…

அருமை சகோ தன்னம்பிக்கை கவி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... அருமை சகோதரி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கில்லர்ஜி சகோ

நன்றி தனபாலன் சகோ

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...