புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புதன், 8 ஏப்ரல், 2015

மூச்சை இழுமூச்சை இழு
புழுக்கம் குறையுமட்டும்
நானுக்கு நானாகி
விரிந்துகொள்

காற்றைத் தூவு விதை
புழுக்கம் புழுங்குமட்டும்


மரக்கீறல்களுக்குள்
துண்டுபட்டுக் கிடக்கும்
கறுப்புப் பொதிகளுக்கும்
நட்சத்திரங்களுக்கும்
அறிமுகமாயிரு
அமிழ்ந்துவிடாதே.

சுவாசி
புழுக்கம் குறையுமட்டும்.

சில்வண்டுகளின் சந்தோஷக்
கத்தல்களைப் பொதித்துக்கொள்

இருட்டு ரொட்டியை
மென்மையாகச் சுவை

மூச்சை இழு
மெல்ல மெல்ல விடு

பரவாயில்லை
புழுக்கம்
மெதுவாகக் குறையட்டும்
குறையுமட்டும் .. சுவாசி.

-- 85 ஆம் வருட டைரி.

1 கருத்து:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...