அந்தி..
அந்தி வெளிச்சத்தின்
சாயம்போன சட்டை
பறவைகளின்
ஸங்கீதக் கரகரப்புக்
கமகங்களுக்கு
அபிநயம் பிடித்துப் பார்க்கும்
பெண்.
சாயம் போன
நார்மடி முக்காட்டை
இழுத்துவிட்டுக்கொள்ளும்
பால்ய விதவை.
தீய்ந்துபோன ‘
பீட்ரூட் பொரியலாட்டம்
கப்பிக் கிடக்கும்
மேகப் பத்தைகள்.
அந்தி
அது மனங்களின்
ஆடையவிழ்ப்பு
முதலை விழுங்கி
அகழிகள் அடைத்திருக்கும்
கோட்டைக் கர்ப்பம்.
மரங்கள்
பச்சைத் தொப்பி போட்டு
மறைத்திருந்த கறுப்புமுடி
அவிழ்த்து உலாத்தும்.
நிலவுத் தூசியும்
நட்சத்திரப் புழுதியும்
வெளிச்சப் புழுங்கல்களைத்
தூவிப் போகும்.
அந்தி
தீக்கரங்களின்
கால்களின் முட்டிக்கறுப்பு
திப்பிப் பதறல்
அந்தீ
அது தீயின் நீழல்.
-- 85 ஆம் வருட டைரி.
-- 85 ஆம் வருட டைரி.
2 கருத்துகள்:
வித்தியாசமான வர்ணனையை ரசித்தேன்...
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))