மரங்கள்
உதிர்ந்துகொண்டிருக்கின்றன.
ஞாபகம்
உதிர்க்கும் என்னைப் போல.
இளநீர்
மட்டைகளாய்க்
குவிந்து கொண்டிருக்கும்
நினைவுப் பாதை
பாதம் கடந்து கடந்து
தேய்ந்து போகும்.
இதயத்துள்
எறும்பு புற்று கட்டும்
வானம் மேகம் திரட்டி
மழை தெறித்து
எனக்கு நிஜம் உணர்த்தும்
எறும்பு
பிறந்தநாள் வாழ்த்து சொல்லி
ஊர்ந்து போகும்.
-- 1986 july 14 - diary :)
-- 1986 july 14 - diary :)

3 கருத்துகள்:
ரசித்தேன் ரொம்பவே...
நன்றி தனபாலன் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))