புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

வியாழன், 23 ஏப்ரல், 2015

நிலவுப் பெண்.ஆற்றங்கரை மேட்டில் அருவி வீழும் அழகில் முல்லைப் பூக்களின் புன்னகையில் முக்காட்டை விலக்கி மெல்ல என்னை எட்டிப் பார்க்கும் நிலவு கூட என்னை மயக்கவில்லை. 

ஏனெனில் என் நிலவாம் உன் முகம் முன் இந்த நிலவுப் பெண்ணின் சாகசப் புன்னகை எம்மாத்திரம். ! 

இந்த நிலவுக்கென்ன அடிக்கடி வெட்கம் வந்து முந்தானையை மூடிக் கொள்கின்றது.. ? 

ஓ! என்னருகில் அமர்ந்திருக்கும் உன்னைப் பார்த்து வெட்கித்தான் முக்காட்டுக்குள் முகம் புதைப்போ. ? 

இராக்கால பிறைச்சந்திரன் என்னிடத்தில் வந்து என் கீற்றுப் புன்னகைக்கீடாக இந்த உலகில் எதுவுமுண்டா என அறைகூவல் விடுத்தான். 

யான் அவனிடத்தில் என் காதலியின் முத்துப் பற்களைப் பார். ! முல்லைச் சிரிப்பைப் பார் என்றேன்.. என்னடா சத்தம் இல்லை என நிமிர்ந்தால் எங்கே ஓடி ஒளிந்தான் இந்தப் பிறைச்சந்திரன். !

-- 82 ஆம் வருட டைரி :) 

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆகா...! ரசித்தேன்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...