ப்ரபஞ்சக்
க்ரகங்களுக்குள்
சின்னதாய்
க்ரகம்
என்ற ஒரே
காரணத்துக்காய்
சுழல
அனுமதிக்கப்பட்ட இது
இதனுள்
நெருப்பில்லை
தகிப்பில்லை.
பாறைகள்
மலைகளில்லை
யாரின்
கால்களும்
இன்னும்
படவுமில்லை.
சூரியனைப்
பிரிந்தாயிற்று
சுழலுதலே
விதிமுறையாம்
இதுவோ
எல்லாக்
க்ரகங்களைச் சுற்றியும்
தன்னைச்
சுற்றியும்.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))