15.1.85 நாங்கள் ஐவர் பங்கு பெற்ற விவேகானந்தரைப் பற்றிய
கவியரங்கம்
கவியரங்கம். விவேகானந்தர் – சீடர்
தெரியாமல் மிழற்றினேன் மழலையிலே
தெரிந்தே உளறுகிறேன் இளமையிலே
இன்பத்திலும் துன்பத்திலும்
வார்த்தைச் சிதறுகிறேன்.
மலையைக் குடையும் புழுவாய்
மனம் நோகப் பண்ணிடினும் மனம் நெகிழ்ந்து
மடிமேலமர்த்தும் ப்ரிய தாய்க்கு
எச்சிற்பட்ட வார்த்தை முத்தங்கள்.
தரிசாய்க்கிடந்த என்னைச் செதுக்கி
நன்செய்யாக்கிய பாத்திமா உரத்துக்கு
ஆயிரம் கோடி வந்தனங்கள்.
தலைமைச் சந்திரனுக்கும்
பக்கத்தாரகைகளுக்கும் வணக்கங்கள்.
ஆசிரிய உழவர்க்கும் நன்செய்ப் பயிர்களுக்கும்
நேசம் நிறைந்த நமஸ்காரங்கள்.
சிறந்த சீடனெனக் கவியிசைக்கத்தான்
கையிலெடுத்தேன் விவேகானந்தனை
எடுத்தவள் வைக்க மறந்துபோய்விட்டேன்
மெய்மை இடம் பொருள் காலம் அனைத்தும் மறந்தேன்
விவேகானந்தச் சூரியனுக்குப்
ப்ரகாசிக்க ஞான ஒளி காட்டிய
இராமகிருஷ்ண பரமஹம்சருக்கும்
சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.
வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும்
அவன் கற்றுக்கொண்டது நிறைய
அவன் வழிகாட்டியாய் அறிஞனாய்
ஆன்மீகவாதியாய் பயணியாய் அமைய
ஆரம்பமே அவன் சீடனாயிருந்து
அறியும் தேட்டமுடையவனாய் இருந்ததே.
மூன்று ஞானாசிரியர்களைப் பெற்றவன் இவன்
முதல் ஆசிரியர் தாய்
இரண்டாவது வண்டிக்காரர்
மூன்றாவது இராமகிருஷ்ணர்.
தாயின் மூலம் இறையைமைப்
பற்றி பரந்துகொள்ள முடிந்தது.
இறக்கும் தருவாயிலும் ப்ரார்த்தனை
செய்துகொண்டு இருந்தவன் அவன்
குரலைக் கீர்த்தனைப் பூக்களாக்கி
அர்ச்சித்து மகிழ்ந்தான்.
வண்டிக்காரன் மூலம் வாழ்க்கையைப் பற்றிய
மாயங்கள் விலகி உண்மையை
அறிந்துகொண்டான்.
சுயநலத் தகிப்பும்
துன்பத் தீச்சுவாலைகளும் நிறைந்த
விவாகமெனும் குப்பைத் தீயில்
குளிர்காய்வதொழித்து
விவேகமாய் நின்றவன்.
அழிந்து போகும் மட்கலங்களுக்கிடையில்
அதிசயமாய் வனையப்பட்ட
இரும்புக் கலம் அவன்.
அவன் ஒரு ஞானச் சங்குதான்
ஆனால் அது ராமகிருஷ்ணரால்
ஊதப்பட்ட பின்தான் அதனுள் மறைந்திருந்த
ஜீவித ஒலி புரிந்தது.
பட்டகாலிலே படும் என்பதாய்
எத்தனை துன்பங்கள்.
அவ்விளைஞனைச் சூழ்ந்தது.
அடிமேல் அடித்தால் அம்மியும்
நகரும் என்பது பொய்யானது
இவன் நிலையில்
தந்தை இழந்து அடிப்படைத் தேவைகளும்
தேடப்படவேண்டிய சூழலில்
அவனுள் அறிவுத்தேட்டம்
உணர்விழந்து போகவில்லை.
பட்ட மரத்திலே பட்ட கட்டாரியாய்
துன்பங்கள் மோதித் தோற்று ஓடின.
--இத்தோடு நிற்கிறது இக்கவிதை டைரியில். மிச்சமெல்லாம் ஏதோ ஒரு பேப்பரில் எழுதி இருக்கிறேன். அது கைக்குக் கிட்டவில்லை இன்னும். கிட்டியபின் மிச்சமும் பதிவிடுகிறேன். :)
3 கருத்துகள்:
அருமை... மன உறுதி அனைத்தையும் துரத்தி விடும்...
உண்மைதான் தனபாலன் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))