இன்றைய பாரதம்:-
இன்றைய பாரதம் எலும்புக் கூடாய்
நரம்புக் கோவணம் கட்டிக்கொண்டு
கையில் திருவோடு தூக்கித்
தெருவோடு அலைகின்றது.
ஆமையாய் உள்ளிழுத்துகொண்டு
நத்தையாய்ச் சுருங்கிக்கொண்டு
சுவத்துக்குச் சுவர்
சாணியடிக்கப்பட்ட
சினிமா போஸ்டர்களாய்
தொட்டால் சுருங்கிக்
(பெண் ) குறிஞ்சியர்கள்.
விண்வெளிக்குத் தற்போது
அனுப்பினது ஆப்பிள் என்றால்
நியூட்டன் விதிக்கு மாறாக
ஆப்பிள் எப்படி விண்ணுக்குள் விழும்
எனக் கேள்வியிடும்
பரட்டைத்தலைப் பாரதங்கள்.
இங்கே குருஷேத்திரம்தான்
நடக்க வேண்டாம்.
அட!
இருக்கின்ற அத்தனை மனங்களுமா
சுரணையற்ற இழைப்புளியால்
செதுக்கப்பட்ட மரத்துண்டங்களாயிருக்கும்.
இங்கே அத்தனை
அலாரங்களுக்கும் என்ன
ப்ரயோசனம். ?
இருக்கின்ற சில
காண்டாமணிகளே
காதைப் பிளக்கின்றன.
மூளையைச் சுறுசுறுக்க
முயன்று அறுந்து போயின.
எத்தனை நாள்தான்
இங்கே சோற்றுப் போராட்டம்
நடக்கும் இரண்டு காலிக்கும்
நான்கு காலிக்கும்.
ஐந்திலும் இருபத்தி ஐந்திலும்
வித்யாசம் இல்லாமல்
(பட்டக்) கட்டாரி தூக்கியே
பலமிழந்து போன பரசுராமர்கள்
சக்கரங்கள் உருளவேண்டும்
என்பதே விதியாயிருக்க
இங்கே பணக்கார அச்சாணிகள்
தான் முறிந்தேனும்
சக்கரம் உடைக்கின்றன.
அரசியல் இராஜாளிகள்
அடித்து வீழ்த்தப்படும்போதும்
மக்கள் கருணையினால்
சில மகான்கள்
மகா மகான்களாய் ஆக்கப்படும்போதும்
கவனக் குறைவினால்
கணக்கின்றிப் பலர் அழிந்தாலும்
இன்னும் கொஞ்சம் நம்பிக்கை
ரோமமாய்ப் படர்கின்றது.,
வெட்ட வெட்ட துளிர்த்து.
இன்றைய பாரதம்
என்றைக்காவது உருப்படும்,
இருளில் சுதந்திரம்
கிடைத்தமாதிரி என்று.
டிஸ்கி :- 1983 ஆம் வருட டைரி .
டிஸ்கி :- 1983 ஆம் வருட டைரி .
3 கருத்துகள்:
32 வருடங்களாக தொடர்கிறதே...!!!
ஆம் தனபாலன் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))