புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

செவ்வாய், 10 மார்ச், 2015

அர்ஜுனனானதுஇன்று நான்
அர்ஜுனனானேன்
இந்த உலக விருட்சம்
கண்ணில் படவில்லை.
கண்ணை உறுத்து விழிக்கும்
கிளைக்கட்டிடங்கள் புரியவில்லை
சலசலக்கும்
இலைமனிதர்கள் தெரியவில்லை.
என் நாண் துடிக்கிறது
மாங்கனியும் தெரியவில்லை
காம்பாய்த் துடிக்கும் உன் முகம்.
கோபத்தால் சிவக்கும் உன்முகம்
மட்டும் தெரிந்தது.
என் நாண்
ஆணைக்குக் காத்திருந்தது .
சுமைதாளமுடியாமல்
துடித்துக்கொண்டிருந்த உன்னை
சமப்படுத்த என் மன அம்பு
மறுகிக் கொண்டிருந்தது.
ஆம் இன்றுதான் நான்
அர்ஜுனனானது

3 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை சகோதரி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...