சலனப்படாத இரவு:-
சாலையோரங்கள்
கள்ளிபோர்த்திச் சுருண்டிருக்கும்
மரங்கள் இலைகள் பூசி
விறைத்திருக்கும்.
குளிர் கோரையாய்
வளைந்து வீசும்
வானம் மேக ஒட்டுத்
தைத்துக்கொள்ளும்.
தோட்டம் பனியில்
நைட் க்ரீம் பூசும்.
மனிதர்கள் சுலபத்தில் அழுது
மெல்ல உறங்குவார்கள்.
ஜன்னல் மூக்குப் பொத்தல்களில்
சன்ன மூச்சு விடும்.
இருள் எங்கெங்கும் இறுக்கமாய்
ஆசனம்போட்டு அமர்ந்திருக்கும்.
குளிர் பூவாசம் அணிந்துகொள்ளும்.
மனசு மெல்ல நடந்து
நிலா தேடிச் சலிக்கும்.
இரவு கமுக்கமாய்க்
கறுப்புச் சடாமுடி வளர்த்து
நிஷ்டை செய்யும்.
-- 85 ஆம் வருட டைரி
3 கருத்துகள்:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
இனிமை...
நன்றி தனபாலன் சகோ :)
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))