புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புதன், 11 மார்ச், 2015

கூண்டுக் கவிதைகள்.கிடைத்தனவா ?
அந்த எண்ணப் பார்சல்கள்
வேர்க்க உழைத்து
சீராய்ச் சுவாசித்து
சலித்து முறிக்கும்
சிந்தனைப் பரிசுகள்.

கிடைத்தனவா ?
மனப்பறவை
உதிர்த்துப் போட்டுப்போன
மஞ்சள் சிறகுத் துளிகள்
பேனாமுனை சுரக்கும்
மையூற்றாய்ப் பொங்கி வந்த
அன்பு வெள்ளங்கள்.

கிடைத்தனவா ?
வெய்யிற்திடல்க்
கூட்டங்களில்
நீல ஆகாயம் பார்த்துப்
புஷ்பிக்கும் பூக்கள்.

கிடைத்தனவா ?
உருவ உருவ
கொட்டிக்கொண்டே இருக்கும்
மகிழம்பூக்களாய்
பன்னீர்ப் புஷ்பங்களாய்
உடல் சிவந்து 
முகம் வெளுத்த
சங்குப் பூக்களாய்
சிதறிக்கிடக்கும்
நீல எழுத்துள் அடைபட்ட
கூண்டுக் கவிதைகள்

-- 84ஆம் வருட டைரி.

4 கருத்துகள்:

King Raj சொன்னது…

சிறந்த சிந்தனையின் பரிசு அழகான கவிதை. வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகான கவிதை எங்களுக்கு கிடைத்து விட்டது...!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கிங் ராஜ் சகோ

நன்றி தனபாலன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...