எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 10 அக்டோபர், 2014

மணிமுத்துக்கள்.



மணிமுத்துக்கள் :-

உடும்பு மனத்திற்கு 
உறியடி உற்சவத்தால் 
என்ன உபயோகம். 
நாட்காட்டிகள் துகிலுரிக்கின்றன. 
தொடர்ந்து. மழை மேகங்களின் 
வெளிநடப்புக்கள். 
கருணைக்குச் சிறிதும் இடமில்லை. 
சாம, பேத தானம் 
எல்லாம் முடித்தாகிவிட்டது. 
இனி தண்டம்தான் பாக்கி. 
அதையும் முயன்றுவிட வேண்டும். 
தடியடித்துப் பழுக்கவைக்கும் பழத்துக்கு 
ருசியில்லை என்றாலும் 
பழம் தின்னாமல் இருக்க முடிவதில்லை. 
ஆசையும் விடுவதில்லை. 
எத்தனை முறை சூடு பட்டாலும் 
நெருப்பில் கைவைக்கும் ஆசைவிடவில்லை. 
ஏமாற்றச் சுகங்களை எதிர்பார்த்துத்தானா 
ஏற்பாடுகளின் நடப்பு. 
இரவின் கரங்களுக்குள் 
சிறையெடுப்பு. 
தினம் தினம் நடிப்பு. 
ஏனிந்த வீண் நடிப்பு.? 
யாரை ஏமாற்ற..? 
என்னை இன்சல்ட் பண்ணுவதாக நினைத்து 
உன் மனதுக்குள் பனிமூட்டச் சமாதானம். 
விடியலின் பட்டுப்பாதங்களின் 
மிருதுவான தொட்டு எழுப்பல். 
தட்டுத் தடவல். 
தோல்வியே வெற்றிக்கு முதல்படியென்றாலும் 
தோல்விக்கு எத்தனை ஆரம்பப் படிகள். ? 
என்றாவது ஒரு நாள் இதை நினைப்பாய். ! 
உண்மையான அன்பு எதையும் சாதிக்கும். 
எதையுமே. 
அதற்கு அத்தகைய மனோ சக்தி உண்டு. 
அதை நீ உணரும்போது 
ஒரு சொட்டுக் கண்ணீர் .. 
அதை மட்டும் பரிசாகத்தா.

--1984 ஆம் வருட டைரி

4 கருத்துகள்:

kowsy சொன்னது…

தோல்வியே வெற்றிக்கு முதல்படியென்றாலும்
தோல்விக்கு எத்தனை ஆரம்பப் படிகள். ?
என்றாவது ஒரு நாள் இதை நினைப்பாய். !
உண்மையான அன்பு எதையும் சாதிக்கும்.
எதையுமே.

அருமை

kowsy சொன்னது…

தோல்வியே வெற்றிக்கு முதல்படியென்றாலும்
தோல்விக்கு எத்தனை ஆரம்பப் படிகள். ?
என்றாவது ஒரு நாள் இதை நினைப்பாய். !
உண்மையான அன்பு எதையும் சாதிக்கும்.
எதையுமே.
அருமை

Thenammai Lakshmanan சொன்னது…

கருத்திட்டமைக்கு நன்றி சந்திரகௌரி சிவபாலன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...