பூமியெங்கும்
உழுது செல்கிறது.
வயலானாலும்
பழைய கோட்டையானாலும்
மலையானாலும்
மூடிய இலைகளானாலும்
பாரபட்சமில்லாமல்
அச்(ட்)சரேகை
தீர்க்கரேகை
பாகைகள்
அறியாமல்
வெய்யில்
கிடப்பவர் வர்ணமெல்லாம்
உறிஞ்சிக்
கறுக்கி
ஒரு
மஞ்சள் நிற ராஜாளியைப் போல்
தினம்
பூமியின்மேல்
சிறகு
விரித்துக் கவிழ்ந்து செல்கிறது.
3 கருத்துகள்:
அருமை! வாழ்த்துக்கள்!
நன்றி தளிர் சுரேஷ்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))