சாயம் போன வானவில் :-
வர்ணங்கள் குழப்பங்களை
உடுத்துக் கொண்டன.
வானவில் சாயம் போட்டுக்
கொள்ள மறந்துபோனது.
ஒரு மழைக்கால மாலையில்
வானத்தின் ஓரத்தில்
ஏழு கோடுகள் மட்டும்
எஞ்சியிருந்தன
கண்ணை மறைக்கும்
வெள்ளைக்கோடுகள்.
நிறங்கள் உறிஞ்சப்பட்டதை
உணராத பேதை வானவில்கள்
சந்தோஷ வானுக்குள்
உலா வருகின்றன.
உடைகள் உருவப்பட்டதை உணராமல்
நிர்வாணப்பட்ட நிறங்கள்
பிரசவித்தன
சாயம் போன வானவில்லை..
மேக்கப் போடமுடியாத
ஏழை நடிகர்கள்
சாயம் உதிர்ந்த வானவில்கள்.
வேர்களைத் தொலைத்துவிட்டு
காய்ந்த நார்களைப் பற்றியிருக்கும்
சாயம்போன வானவில்.
தண்ணீரில் மூழ்கி
அழுக்குகளைத் தொலைத்துவிட்டுத்
திரும்ப அப்பிக்கொள்ள நினைக்கும்
வெள்ளை வில்கள்.
சாயம் போனதை நினைத்து
வருந்தும் வானவில்கள்.
-- 82 aam varuda diary.
-- 82 aam varuda diary.
3 கருத்துகள்:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
சாயம் போன வானவில்லையும் பிடித்துக் கவிக்கணை தொடுக்கும் தேனம்மைக்கு ஆயிரம் பொன்முடி பரிசிலாக வழங்கப்படட்டும்....
நன்றி ராஜசேகரன் :)
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))