புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

செவ்வாய், 14 அக்டோபர், 2014

சுய அறிவு

யதார்த்தத்தோடு  அனுசரித்துப் போகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்னால் அது முடியுமா.

பணிந்து போவதில்தான் வாழ்க்கைத் தத்துவமே அடங்கியுள்ளதா. ஹூம் அதெப்படி விட்டுக் கொடுக்க முடியும். ஊம்.

யதார்த்தவாதியாய் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளப் ப்ரம்மப் ப்ரயத்தனம் பண்றேன். BUT I CANT.. WHAT AM I GOING TO DO NEXT. ?

 எல்லா தமிழ் எழுத்தாளர்களுமே ஜெ. கா, இ. பா.  எல்லாரும் ஒரு பெண் தான் தனித்து உரிமையுடன் வாழ பெண்கள் சுதந்திரத்துக்காகத் தம்மை அர்ப்பணிக்கிறதுக்கு முன்பு ஆண்களின் உதவியை நாடிப் பெறுவதாக ( ஒரு குறிப்பிட்ட ஆணின் ) கூறியிருக்கின்றார்களே. !

ஒரு பெண்ணுக்குக் கூடவா சுய அறிவு இல்லாமல் போயிற்று. அதுவும் பெண்கள் விடுதலைக்கு ஆண்கள் உதவியை நாடிப் போவதாக.. சரியான கேலிக்கூத்தாயில்ல இருக்கு.

ஒரு பெண் தான் சுதந்திரமா இல்லை என்பதை உணர்த்தக் கூட ஒரு ஆண் தானா தூண்டுகோலா இருக்கணும்.

பெண்கள் மென்மையானவங்கதான் ஆன அது எக்ஸ்டர்னலா இல்லை அஃப்கோர்ஸ் இண்டர்னலாவும் அப்படித்தான். ஆனா தான் ஏமாற்றப்படுறோம் அடக்கப்படுறோம்னு தெரிஞ்சா சாஃப்ட்னெஸ் எல்லாம் போயி ஹார்ட்னெஸ்தான் மிஞ்சும். அப்புறம் அவளை நெனைச்சாலும் பெண்ணா மாத்த முடியாது. அவ தன் குணங்கள்ல தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கொண்டு ஆண்மையின் முரட்டுத்தனத்தோடு உருவாகிக்குவா.

-- 83 ஆம் வருட டைரியில் எழுதியது இன்னைக்கும் பொருந்தும் போலிருக்கு :)

3 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Geetha Sambasivam சொன்னது…

//எல்லா தமிழ் எழுத்தாளர்களுமே ஜெ. கா, இ. பா. எல்லாரும் ஒரு பெண் தான் தனித்து உரிமையுடன் வாழ பெண்கள் சுதந்திரத்துக்காகத் தம்மை அர்ப்பணிக்கிறதுக்கு முன்பு ஆண்களின் உதவியை நாடிப் பெறுவதாக ( ஒரு குறிப்பிட்ட ஆணின் ) கூறியிருக்கின்றார்களே. !//

இதில் தவறோ, அவமானமோ, பெண்ணுக்கு அவமதிப்போ ஏதும் இல்லை! உண்மை தான் சொல்லப்பட்டிருக்கிறது. குறைந்த பக்ஷமாக அலுவலில் இருக்கும் பெண்ணானால் மேலதிகாரியோ, கூட வேலை பார்ப்பவரோ ஆணாக இருக்கலாம். அவங்களோட ஆலோசனையும், ஆதரவும் கிட்டி இருக்கலாம். அதை உதவியாகக் கொண்டு பெண் தன் கருத்தை வற்புறுத்தலாம். எதிர்பாலினம் ஆதரவு கிட்டுவதும் ஓர் நல்ல மாற்றத்துக்கு அறிகுறி தானே!

Thenammai Lakshmanan சொன்னது…

நல்ல கருத்து மற்றும் அணுகுமுறைதான் கீதா மேம்.

ஆனா நான் இதை எழுதியது என் கல்லூரிப் பருவத்தில் .. அப்போது தோன்றிய எண்ணங்கள் இவை. :)

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...