ஈசல் உதிர்க்கும் சிறகுகள்
சொல்லிச் செல்கின்றன
பறக்கும் காலத்தை.
ஒருநாள் வாழ்வென்றாலும்
பறத்தலை நிறுத்துவதில்லை
ஈசல்கள்.
வண்ணத்திப் பூச்சிகளுக்கும்,
மின்மினிகளுக்கும் குறைவானதல்ல
ஈசலின் வாழ்வு.
ஒரு பூ மலர்ந்துதிர்வதாய்
எந்த துக்கமுமில்லாமல் சிறகுதிர்த்து
பறந்து சென்று விடுகின்றன அவை.
கரும் சாம்பல் மேகங்களாய்க்
கடந்து கொண்டிருக்கிறது
ஈசலின் இருப்பு.
சொல்லிச் செல்கின்றன
பறக்கும் காலத்தை.
ஒருநாள் வாழ்வென்றாலும்
பறத்தலை நிறுத்துவதில்லை
ஈசல்கள்.
வண்ணத்திப் பூச்சிகளுக்கும்,
மின்மினிகளுக்கும் குறைவானதல்ல
ஈசலின் வாழ்வு.
ஒரு பூ மலர்ந்துதிர்வதாய்
எந்த துக்கமுமில்லாமல் சிறகுதிர்த்து
பறந்து சென்று விடுகின்றன அவை.
கரும் சாம்பல் மேகங்களாய்க்
கடந்து கொண்டிருக்கிறது
ஈசலின் இருப்பு.

2 கருத்துகள்:
இறகுதிற்கும் ஈசலின் இருப்பும்,வாழ்நாளும் நம்மில் எதையாவது உதிர்த்துச்செல்வதாகவே/
நன்றி விமலன் கருத்துக்கு.
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))