*தெரிந்தவர்
தெரியாதவர்
பேதமற்று
இதழ் மலர்கிறது.
பேருந்தின்
முன்சீட்டில்
பூத்த
குழந்தை.
**************************************
**************************************
*இறக்கைகள் உண்டு..
பறக்க முடியவில்லை..
உன் அன்பெனும் சிறையில் நான்.
பறக்க முடியவில்லை..
உன் அன்பெனும் சிறையில் நான்.
*வார்த்தைகள் ஸ்தம்பித்த
மௌன உரையாடல்
தொடர்ந்து செல்கிறது
தன்னைத் தான் விடுவித்து
நாட்காட்டி திசைகாட்டி இன்றி
கனத்துச் சோம்பியிருக்கும்
கரடியைத் தூக்கிப் பறக்கும்
பட்டாம்பூச்சியின் பின்.
மௌன உரையாடல்
தொடர்ந்து செல்கிறது
தன்னைத் தான் விடுவித்து
நாட்காட்டி திசைகாட்டி இன்றி
கனத்துச் சோம்பியிருக்கும்
கரடியைத் தூக்கிப் பறக்கும்
பட்டாம்பூச்சியின் பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))