எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

கனவு இராத்திரிகள் :-



கனவு இராத்திரிகள் :-

பொய்மை சுகத்தில்
எண்ணங்களால் கட்டுகிறேன்
ஏமாற்றக் கோட்டைகளை
அடுக்கடுக்காய்.

உன்னைச் சந்திக்கப்
போகிறேன் சில விநாடிகள்
மட்டும் கனவுலகில்

அந்த வினாடிகளுக்காக
அஸ்தமன நேரத்திலும்
அர்த்த இராத்திரியிலும்
தவம் செய்கிறேன்.

காத்திருப்பதே ஒரு தனிச் சுகம்தானே ?

ஏமாறப் போகிறேன்
எனத் தெரிந்தே
ஏமாறுவதில் ஒரு சுகம்.

என்னால் கட்டப்படும்
எண்ணற்ற கோட்டைகள்
அடுத்தடுத்துச் சரிகின்றன
அஸ்திவாரம் இல்லாததால்

தூங்காத இராத்திரிகள்
கோழித்தூக்க விழிச் சொருகல்
கனவு சுகத்தில் மூழ்கிக்
கதையளக்கும்

துன்பச் சுடரின்
பிம்பங்கள் ஆயிரம்..
கனவுக் குட்டையில்
உன் உருவக் கலங்கல்கள்.

கனவுகள் கதவுகளைத் தட்ட வரும்
நனவுகளோ இமைக்கதவைத்
திறந்துவிடும்.
கண்கள் விழித்து நோக்கும்.

கனவுகளுக்கும்
நனவுகளுக்கும்
கண்ணாமூச்சிப் போட்டி.!

கண் வானத்தில்
நீர் மேகங்களின் உலாவல்கள் !
வெள்ளத் தேங்கல்கள். !

உன் உருவத்தை
என் விழிகளுக்குள்
தேடுகிறேன். !
தேடுகிறேன் !
தேடிக்கொண்டே ..

-- 83 ஆம் வருட டைரி. 

1 கருத்து:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...