மௌனபாஷை.:-
( பட்டுப்போன மரத்துடன் சிறு மோதல் ).
ஏ. !
மரமே !.
வெட்கங்கெட்ட மரமே !
ஏனிப்படி பச்சை உடை
அணிந்துகொள்ளமாட்டேன் என்று
முரட்டுக் குழந்தை போல
அடம்பிடித்து
அம்மண உடை உடுத்தினாய்.
முன்பு,
உனக்கு மட்டும்
வருடந்தோறும் வசந்தகாலம்
இலைகளுக்கு மட்டும்
இறந்து உயிர்க்கும்
ஈனப்பிழைப்பு.
இப்போது மட்டும்
ஏனிப்படி உனக்காகக் காத்திருக்கும்
அழகான இலைப்பெண்ணை
மணக்க மறுப்பு ?
அறிவற்ற மரமே !
ஏனிந்த மௌனத் தவம். !
உற்சாக அதிர்ச்சியா ?
உற்சாக அதிர்ச்சியா ?
மகிழ்ச்சித் திணறலா ?
இயலாமையின் அயற்சியா ?
இல்லாமையின் கொடுமையா ?
-- 82 ஆம் வருட டைரி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))