எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

பிஞ்சு எச்சில்.

சாத்தியங்களுக்குள்
சாமர்த்தியமாய் மறைத்துக் கொள்கிறோம்
எங்கள் பற்குறிகளும் நகக்குறிகளும்
அவற்றின் தடங்களும்
சொற்ப நாட்களுக்குப் போதும்.

வருடங்களாய்க் காத்திருந்தவளுக்கு
வருடல்கள் நினைவுச் சின்னங்கள்.
விதம்விதமான இனிப்பிலிருந்து
இச்சுகள் வரை திகட்டிக் கிடக்கிறதென்மேல்.

வேகமாய் வரும் டாக்ஸியின்
கதவை அறைந்து மூடுகிறேன்
அடுத்த வஸந்தகாலத்தில்
திறந்துகொள்ளலாமென்று.
நினைவின் மூட்டைகளைப் போலக் கனக்கின்றன
வருடத்துக்கான பொருளின் மூட்டைகள்.

ஃப்ளைட்டின் கதவுகள் விசாலமானவை
அழகிகளும் அவர்கள் வழங்கும்
போர்வைகளும் போதுமானதாயில்லை
குஞ்சுக் குளிர்ப் பாதங்களும்
பிஞ்சு எச்சிலும்பட்ட
என் கன்னத்தில் வழியும்
கண்ணீரைத் துடைக்க.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...