மறக்கக் கூடிய கேள்வியையா
என்னிடம் நீ கேட்டாய்
மறக்கத்தான் முடியுமா என்னால் ?
வேண்டாம்.
சென்றுவிடு.
என் அழகிய மாயைக்
கனவுகளின் நிர்வாணத்தை
சாயம்போன என் சுயரூபத்தை
எனக்கு இனம் காட்டிவிடாதே.. !
ப்ளீஸ் லீவ் மீ அலோன் என்றேன்
நோ டியர் ஐ நெவர் லீவ் யூ அலோன்
என்கிறாய்.
என்னைப் பற்றி நீ கொண்டிருக்கும்
கனவுகளைக் கலைத்துவிடு.
தகர்த்து எறிந்துவிடு. !
உன் வாழ்வும் கனவுகளிலேயே
அமிழ்ந்துவிடக் கூடாதென்றுதான்
நான் என்னைப் பற்றி நீ
நம்ப இயலா அளவுக்குக் கூறினேன்.
என்னைத் தப்பாக நினைத்து
விட்டாலும் சரி.
உன் வாழ்வு ஒளி வீச வேண்டும்
குட்பை டியர் என
வாய்க்குள் முனகிவிட்டு நிமிர்ந்தால்
எதிரில் வந்து நீ
நீ ..
நிற்கின்றாய்.
இபோது நான் என்ன செய்வேன் ??? !
-- ஹிஹி 80 ஆம் வருட டைரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))