உனக்கு.. உனக்கு மட்டுமே ..
உனக்காக
உனக்கு மட்டும்
உனக்கு மட்டுமே !
என எழுத விரும்பிய யான்
உன்னைத் தவிர
என எண்ணுகிறேன்.
அனைவரையும்
தவிர்க்க விரும்பிய யான்
உன்னை மட்டும்
உன்னை மட்டுமே
தவிர்க்கிறேன்.
இராமனுக்கு சீதையாக
இருக்க விரும்பிய யான்
அம்பையானேன்.
உன் கண்பார்வைக்குத்
தவங்கிடந்த யான்
உன் காலடியையும்
அறவே வெறுக்கிறேன்.
ஏனெனில்
உன் இதய சிம்மாசனத்தில்
அமர விரும்பிய என்னை
இதயமில்லாமல்
மிதித்துத் தள்ளிச்
சென்றுவிட்டாயே !
-- 82 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))